எங்களை பற்றி

நோக்கு

மேல் மாகாணத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும்  வீடுகள் இல்லாத மக்களுக்கு திருப்திகரமான சுற்றாடல் ஒன்றில் தமக்குரிய வீட்டில் வசிப்பதற்கு  உரிய நிலமையினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

செயற்பணி

மேல் மாகாணத்தின்  குறைந்த வருமானம் பெறும்  மக்களுக்கு  உரிய வீட்டினைக் கட்டுவதற்கு மற்றும் காணப்படும் வீட்டினை மேம்படுத்துவதற்காக உதவிகளை வழங்குதல் மற்றும்  1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வீட்டுக்  கூலி சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தல்.

பொறுப்புகளும் கடமைகளும்

  • —வீட்டுக் கூலிச் சட்டத்திற்கிணங்க  மாகாணத்தினுள் பேணிச்செல்லப்படும்  வீட்டுக் கூலிச் சபைகள் 14  இன் மூலம்  பிரதேசத்தின்  வீட்டு உரிமையாளர்கள் மற்றும்  வாடகைக்கு வசிப்பவர்களுக்கிடையே காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்தல்.
  • —வீட்டுக் கூலிச் சட்டத்தின் 18 ஆவது பிரிவிற்கிணங்க  மீளமைப்புச் செய்வதற்காக  பழைய கட்டடங்களை உடைத்து அகற்ற  அங்கீகாரம் வழங்குவதன் கீழ்  உரிய  ஆதனத்தில் இருந்து  அகலும்  வீட்டு வாடகைக் காரர்களை பாதுகாப்பதற்கும்,  அவர்களுக்கு  உரிமையாளர்களிடம் இருந்து  இழப்பீட்டு நிதியினைப் பெற்றக்கொள்வதற்கும்  வீட்டு கூலிச் சட்டத்தில் காணப்படும்  ஏற்பாட்டின் கீழ் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
  • —வீட்டுக் கூலிச் சட்டத்தின் 22  ஆவது பிரிவிற்கிணங்க  வாடகைக்கு வசிப்பவர்களை   வெளியகற்றும் பரிசோதனை நடவடிக்கை  மற்றும்  வழக்கு நடவடிக்கைகளுக்காக  இழப்பீட்டு  நிதியினைப் பெற்றுக்  கொள்ளல் மற்றும் சட்டத்திற்கு உரியதாக மேற்பார்வை நடவடிக்கையினை மேற்கொள்ளல் .
  • —மாகாண வீடமைப்பு நிதியத்திற்கு உரிய  நியதிச்சட்டத்திற்கு இணங்க  குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு  வீடமைப்பு உதவியை  வழங்குதல் மற்றும்  மீள்பார்வை நடவடிக்கை.
  • —மாகாண அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் /மாகாண குறித்த  நிகழ்ச்சித்திட்டம்/ பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின்   கீழ்  குறைந்த  வருமானம் பெறுபவர்களுக்கு பொருள் உதவிகளை வழங்குதல்.

முன்னால் வீடமைப்பு ஆணையாளர்

திருமதி.ஜீ.லேகா கீதாஞ்ஜலி பெரேரா

 

திருமதி.ஜீ.பீ.எச்.கொலம்பகே

திருமதி. என்.கே.நந்தனி

திரு.எம்.எம்.சீ.கே.கே.மான்னப்பெரும