திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் மக்கள் சேவைகள்

சேவைகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முறை
1.1972 இன்:07. ஆம் இலக்க வீ.கூ.ச.18 அ பிரிவின் கீழ் வாடகையாளருக்கு  வாடகைக்கு வழங்கப்பட்ட, வசிக்கும் அல்லது வியாபார நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 40 வருடங்களை விட பழைய கட்டடம் ஒன்றினை பழுதுபார்க்க அங்கீகாரத்தினை வழங்குதல். 1.உரிய சொத்துரிமையினை உறுதிப்படுத்துவதற்கு உரிய உறுதி / நில வரைபடத் திட்டம்.

2.உரிய கட்டடம் 40 வருடங்களை விடப் பழையது  என்பதனை உறுதிப்படுத்துவதற்கு உரிய  ஆவணம்.

3.புதிய கட்டடத்தினை கட்டுவதற்கான நிதி ஏற்பாடு வேண்டுகோள் விடுப்பவரிடம் காணப்படுகின்றது என்பதனை உறுதிப்படுத்தும்  ஆவணம்.

4.மறுசீரமைப்புப் பிரேரணை முறை தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம்,செலவு மதிப்பீடு மற்றம் போதுமான அளவு  பட்டியல்.

உரிய விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி வீடமைப்பு ஆணையாளர் திணைக்களத்திற்கு  ஒப்படைத்தல் வேண்டும்.
  1. 1972 இன்: 07 ஆம் இலக்க வீ.கூ.ச. 22(1) மற்றும் 22(2) பிரிவின் கீழ் மாத குறித்த கட்டணம் ரூபா:100/- இனை விடக் குறைந்த மற்றும் ரூபா:100/-  இனை விடக் கூடிய இடங்களின் வாடகைக்கு வசிப்பவர்களை அகற்றுவதற்காக வழக்கு நடவடிக்கைகளுக்கு உரிய நிதி வைப்பினைப் பொறுப்பேற்றல்.
மாதாந்த குறித்த வீட்டுக் கூலியினை தீர்மானித்த ஆவணம். உரிய விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி வீடமைப்பு ஆணையாளர் திணைக்களத்திற்கு  ஒப்படைத்தல் வேண்டும்.
  1. பிரதேசத்தின் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு இடையே காணப்படும் பிணக்கினைத் தீர்த்தல்.
உரிய வீட்டுக் கூலிச் சபையிலிருந்து விண்ணப்பப் படிவம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளுதல்  மற்றும் உரிய வீட்டுக் கூலிச் சபையினால்  பணிக்கப்பட்ட நிதியினைச் செலுத்திய பற்றுச்சீட்டு. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை உரிய வீட்டுக் கூலிச் சபைக்கு ஒப்படைக்க வேண்டும்.
4.மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய 03 மாவட்டங்களும்  உட்படுமாறு  வீடமைப்பு உதவியினை வழங்குதல். வீடமைப்பு உதவியினைப் பெற்றுக் கொள்வதற்காக முதலாவதாக வேண்டுகோள் கடிதம் ஒன்றினை முன்வைக்க வேண்டும் .

தகைமையினை பரிசோதித்து வழங்கப்படும் விண்ணப்பத்திற்காக பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.காணியின் உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக உறுதியின் பிரதி ஒன்று.

2.தங்களுக்கு உரித்தில்லாத காணியில் வசித்தால் அக் காணியில் குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கு உரிமையாளரினால் அங்கீகாரம்  வழங்கப்படும் கடிதம் ஒன்று.

3.காணியின் உரிமை காணப்படும் தாய் அல்லது தந்தை மரணமெய்தி இருந்தால் பிள்ளைகள்  ஒருவரை விட அதிகமானவர்கள் காணப்பட்டால் வீட்டினைக் கட்டுபவரினால் ஏனைய சகோதர சகோதரிகளினால்  வீட்டினை நிர்மாணிப்பதற்கு  எந்தவொரு எதிர்பும் இல்லை என்பதற்குரிய கடிதம்.

4. செலவு மதிப்பீடு.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரின்  சிபாரிசுடன் வீடமைப்பு ஆணையாளர் திணைக்களத்திற்கு  ஒப்படைத்தல் அல்லது  தபாலின் மூலம்  அனுப்பப்பட வேண்டும் .